technology

img

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்  

போக்கோ நிறுவனத்தின் புதிய 5ஜி மாடலாக போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற மெய்நிகல் நிகழ்வில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, அசத்தலான சிப்செட் வசதி என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உள்ளது.  போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடலுடன் சேர்த்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ எஃப்3 ஸ்மார்ட்போனின் புதிய வண்ண மாறுபாட்டையும் போக்கோ அறிவித்துள்ளது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி விலை: 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ரூ.19,600ஆகவும், 6ஜிபிரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.21,300-ஆகவும் உள்ளது- 

;